அதிமுக MLA க்கள் ராஜினாமா வழக்கில் இன்று தீர்ப்பு இல்லை - அக்.12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

 
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவில்லை.

அதிமுகவின் 6 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றதை எதிர்த்து, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (அக். 9) தீர்ப்புக்காகப் பட்டியலிடப்பட்டிருந்தது.

அதிமுக

எனினும், தலைமை நீதிபதி விடுப்பில் இருப்பதால் இன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை. இவ்வழக்கின் தீர்ப்பு வரும் அக்டோபர் 12-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.