“அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்!

 
அன்புமணி

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல முக்கியக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ்

நடந்து முடிந்த இடைத்தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து அஇஅதிமுக தங்களது தேர்தல் வியூகங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்துத் தீவிரமான சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அன்புமணி கேட்டுக் கொண்டார். தான் இதனை எந்தவிதத் தவறான நோக்கத்துடனும் கூறவில்லை என்றும், ஒரு நல்ல அரசியல் ஆலோசனையாகவே தெரிவிப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

அன்புமணி

கடந்த காலங்களில் தமிழகத்தில் மக்களை ஆடு, மாடுகளைப் போல அடைத்து வைத்து வாக்குகள் பெறும் மோசமான தேர்தல் நடைமுறைகள் இருந்தனவைக் குறிப்பிட்ட அவர், தற்போது அந்த நிலைமாறி ஓரளவுக்குப் பணம் கொடுக்காமல் ஜனநாயக ரீதியிலான சூழலில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.