மதுராந்தகத்தில் பரபரப்பு - வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற தவெகவினரை விரட்டியடித்த அதிமுகவினர்!

 
மதுராந்தகம் வாக்காளர்களுக்கு பணம் தவெக

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ள நிலையில், நேற்று இரவு மோச்சேரி பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்க முயன்றதாகக் கூறி தவெகவினரை அதிமுகவினர் மடக்கி விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான நேற்று இரவு, மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மோச்சேரி பகுதியில் தவெகவினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைக் கண்ட அதிமுகவினர் அங்கு திரண்டு வந்து தவெகவினரைத் தடுத்து விரட்டியடித்தனர்.

வாக்குப்பதிவு

இந்தச் சம்பவ இடத்திற்கு அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் நேரில் வருகை தந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழலும் பரபரப்பும் நிலவியது.

இது குறித்து தகவலறிந்ததும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் காவல்துறையினரும் உடனடியாக விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக எழுந்துள்ள இப்புகார் அப்பகுதியில் அரசியல் களத்தில் சூட்டை அதிகரித்துள்ளது.