மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கான டெண்டர்!!

 
எய்ம்ஸ்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2015ல் அனுமதி அளித்தது. இதற்கான இடம் அப்போதைய அரசால் ஒதுக்கப்பட்டது. அதன்படி   திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது.  

இமாச்சலப்  பிரதேசத்தின்  எய்ம்ஸ்  மருத்துவமனை

தற்போது  4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அந்தப் பகுதியில்  விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை. இதனால், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்  மாநிலம் முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியது.  இந்நிலையில், மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாடகை கட்டிடத்தில்  எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும்!

 எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் செப்டம்பர் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்றுவிட்டதாகவும், மருத்துவமனையை 33 மாதங்களில் முடிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!