ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

 
ஐப்பசி

மாதங்களில் தை, மாசி, ஆடி, மார்கழி என்று கொண்டாடுகிறோம். இந்த மாதங்களுக்கு எல்லாம் எத்தனை முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவு ஐப்பசி மாதமும் வழிபாட்டுக்கு மிக முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. ஐப்பசி மாதத்தைப் பொதுவாக துலா மாதம் என்று அழைக்ககிறோம்.

துலாம் என்றால் தராசு. இந்த மாதத்தில் தான் பகலும் இரவும் சரிசமமாக இருக்கும். ஐப்பசி மாதத்தில் பல பண்டிகைகளும், விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அத்துடன் ஐப்பசி மாதத்தில் தான் அனைத்து நதிகளும் அதன் நீரில், போக்கிய மனிதர்களின் அனைத்துப் பாவங்களையும் காவிரியில் கரைப்பதாக ஐதிகம். இந்த துலாம் மாதத்தில் காவிரியில் நீராடினால் முன்வினைப் பாவங்கள் நீங்கும். இந்த மாதத்திற்கு பல்வேறு ஆன்மிக சிறப்புக்கள் உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.  இந்த பண்டிகைகளையும், பிரார்த்தனைகளையும், வழிபாடுகளையும் மிஸ் பண்ணாதீங்க.

ஐப்பசி பெளர்ணமி :

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி  விசேஷமானது.   ஐப்பசி மாதத்தில் வருகின்ற பெளர்ணமி நாளில், சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த நாளில் சிவபெருமானுக்கு சமைத்த சாதம், காய்கறிகள் மற்றும் பழங்களால் அபிஷேகம் செய்யப்படும். நாம் உண்ணுவதற்கு உணவளித்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

ஐப்பசி மாத புனித நீராடல் உணர்த்தும் தத்துவம்!

இன்று அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

ஐப்பசி சதயம்: 
ராஜ ராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரிய கோவில், பிரகதீஸ்வரர் ஆலம் இன்று வரையிலும் கட்டிட கலைகளுக்கு எல்லாம் உலக நாடுகளுடன் சவால் விடும் வகையில் கம்பீரமாக ஓங்கி நிற்கிறது. கடல் கடந்தும் தனது கொடியை நாட்டிய வீர தமிழன் ராஜ ராஜ சோழன், ஐப்பசி மாதத்தில் வருகின்ற சதயம் நட்சத்திர நாளில் தான் பிறந்தார். ஐப்பசி மாத சதயம் நாள், ஒவ்வொரு வருடமும் அரசு விழாவாக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

வளர்பிறை ஏகாதசி:

ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நாளில் விரதத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், வறுமை நீங்கி, பசிப்பிணி அகலும். இப்படி ஐப்பசி மாதத்தில் வருகின்ற ஏகாதசி தினத்தை ‘பாபாங்குசா” என்று அழைக்கிறோம். 

தேய்பிறை ஏகாதசி:

ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசியில் விரதமிருந்து வழிபட்டால், கர்ம சிரத்தையாக வழிபடுபவர்கள் அவர்களது முன்வினைப் பாவங்கள் நீங்கப் பெறுகிறார்கள். இந்த ஏகாதசி “இந்திரா ஏகாதசி” என்று அழைக்கப்படுகிறது.

கடை முகம்:

ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் அனைத்துப் புண்ணிய நதிகளும் காவிரியில் கலப்பதாக ஐதிகம். வருடம் முழுக்க வாங்கிய பாவங்களை, ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில், அனைத்து நதிகளும் காவிரியில் கரைக்கின்றன. அதனால், இந்த தினத்தில் காவிரி நீராடல் புண்ணியம் சேர்க்கும்.

தீபாவளி

தீபாவளி :

நரகாசுரனைக் கொன்ற தினம். ஐப்பசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் தமிழர்களின் திருவிழாக்களாக இருந்தாலும், இந்தியா முழுவதுமே தீபஒளித் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் தீபாவளியைக் கொண்டாட ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தயாராகி வருகின்றனர். 

கந்த சஷ்டி:

ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாக முருகன் மற்றும் சிவ ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடப்படும்.

From around the web