ஐப்பசி பௌர்ணமி இன்று: சிவாலயங்களில் அன்னாபிஷேகம் – சென்னைக் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள்!

 
அன்னாபிஷேகம்

 

ஐப்பசி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 25) தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேக வழிபாடு நடைபெறுகிறது. இந்த வழிபாட்டில் சிவலிங்கத்தின் மீது சாதம் சாத்தி அலங்கரித்து, சிறப்பு தீபாராதனை நடத்துவது வழக்கம்.

இன்று அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் அன்னாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்னாபிஷேகம்

இந்த ஆண்டு பௌர்ணமி திதி அக்டோபர் 26-ம் தேதி காலை 10.16 மணி வரை நீடிப்பதால், சில சிவாலயங்களில் நாளையும் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலுக்குச் சென்று அன்னாபிஷேகத்தைத் தரிசித்தால் கோடி சிவலிங்கங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். வழிபாட்டு நேரம் கோயிலுக்கு ஏற்ப மாறுபடலாம் என்பதால், பக்தர்கள் அந்தந்த ஆலயத்தின் அறிவிப்புகளைச் சரிபார்த்துச் செல்லலாம்.