ஐப்பசி அன்னாபிஷேகம்... தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் விடிய விடிய குவிந்த பக்தர்கள்!

 
அன்னாபிஷேகம்

ஐப்பசி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக் கொண்டு, சிவலிங்கத்தின் மீது சாதம் சாத்தி அலங்கரித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றதை பக்தர்கள் பக்தி பெருக்குடன் கண்டு களித்தனர். 

இன்று அன்னாபிஷேகம் செய்யப்படுவது ஏன்?

சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் அன்னாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அன்னாபிஷேகம்

இந்த ஆண்டு பௌர்ணமி திதி இன்று அக்டோபர் 26-ம் தேதி காலை 10.16 மணி வரை நீடிப்பதால், சில சிவாலயங்களில் இன்று காலையும் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. \

கோயிலுக்குச் சென்று அன்னாபிஷேகத்தைத் தரிசித்தால் கோடி சிவலிங்கங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். வழிபாட்டு நேரம் கோயிலுக்கு ஏற்ப மாறுபடலாம் என்பதால், பக்தர்கள் அந்தந்த ஆலயத்தின் அறிவிப்புகளைச் சரிபார்த்துச் செல்லலாம். தமிழகத்தின் பிரபலமான தஞ்சை, மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்து ஐப்பசி அன்னாபிஷேகத்தைக் கண்டு களித்தனர்.