விமானப்படை தளத்தை உளவு பார்த்த தீவிரவாதி கைது: பாகிஸ்தான் தொடர்பு அம்பலம்!

 
குஜராத்

 

இந்திய விமானப்படைத் தளத்தை உளவு பார்த்துப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து, சுற்றுலாப் பயணி போல் வந்து அவர் உளவு வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

IGR: The Gujarat Anti-Terrorism Squad (ATS) has foiled an alleged terror plot targeting the Indian Air Force station in Vadodara and arrested a suspected Jaish-e-Mohammed operative. The accused, ide

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞரான முகமது சஹருல் இஸ்லாம், கடந்த ஓராண்டாகத் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்பில் இருந்து பாகிஸ்தானில் உள்ளவர்களிடமிருந்து உத்தரவுகளைப் பெற்று வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. விமானப்படைத் தளத்தைக் கண்காணித்துப் புகைப்படங்கள் எடுத்ததோடு, தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்லவும் அவர் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gujarat ATS DIG Sunil Joshi Says JeM Operative Arrested With an AK-47-Type Rifle. #GujaratATS #SunilJoshi #JaishEMohammed #Vadodara #NationalSecurity #Gandhinagar #TerrorPlotFoiled #IndiaNews

குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் படை (ATS) போலீசார் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ஏகே-47 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். கைதான நபரிடம் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.