ஆற்றங்கரையில் விமானப் பணிப்பெண் கொடூரக் கொலை… கொள்ளையைத் தடுக்க முயன்றபோது விபரீதம்?

 
விமான பணிப்பெண்

 

மத்தியப் பிரதேசம் – மகாராஷ்டிரா மாநில எல்லையில், வைங்கங்கா ஆற்றங்கரையில் விமானப் பணிப்பெண் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

गोवा एयर होस्टेस मर्डर मिस्ट्री: वर्षा तुर्कर हत्याकांड में लूटपाट की कहानी फर्जी! ड्रामा रचने वाला दोस्त अरेस्ट- Zee News Hindi

மத்தியப் பிரதேசம் – மகாராஷ்டிரா எல்லையில் உள்ள போண்டாரானி கிராமத்தைச் சேர்ந்தவர் வர்ஷா துர்கார் (35). விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்த இவர், 4 ஆண்டுகளுக்கு முன்பு சமர் சையத் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த வர்ஷா, தனது சிறுவயது நண்பருடன் வெளியே சென்றுள்ளார். அப்போது வைங்கங்கா ஆற்றங்கரையில் இருவரும் இருந்தபோது, வர்ஷா கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Pune-Based Air Hostess Found Murdered Near Wainganga River, Two Detained For Questioning | Dynamite News

இந்தச் சம்பவம் குறித்து வர்ஷாவுடன் சென்ற நண்பர் அளித்த தகவலில், கொள்ளை முயற்சியைத் தடுக்க முற்பட்டபோது வர்ஷா தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான உண்மையான காரணம் என்ன, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.