ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் பாதுகாப்பு எச்சரிக்கை! ஜெய்ப்பூரில் அவசரமாக தரையிறக்கம்

 
ஏர் இந்தியா

 

ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரிலிருந்து சுமார் 300 பயணிகளுடன் புதுடெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு நடுவானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

‘7500’ சிக்னலால் பரபரப்பு

விமானக் கடத்தல் அபாயத்தைக் குறிக்கும் ‘7500’ என்ற அவசரக் குறியீடு அகமதாபாத் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு, விமானம் ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bomb Threat Forces Air India Flight To Make Emergency Landing At Jaipur Airport | Asianet Newsable

பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை

விமானம் தரையிறங்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அச்சுறுத்தலின் தன்மை, விமானத்தில் ஏதேனும் சந்தேகத்துக்குரிய பொருட்கள் கண்டறியப்பட்டனவா, பயணிகள் மற்றும் பணியாளர்களின் நிலை என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.