6 அடி 8 அங்குல உயரம்… விமானக் கழிப்பறைக்குள் நுழைய முடியாமல் தவித்த பயணி! வைரல் வீடியோ

 
ஏர் இந்தியா

 

ஏர் இந்தியா விமானத்தில், அதிக உயரம் கொண்ட பயணி ஒருவர் சிறிய கழிப்பறைக்குள் நுழைய முடியாமல் சிரமப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.சுமார் 6 அடி 8 அங்குலம் (203 செ.மீ.) உயரம் கொண்ட வெளிநாட்டுப் பயணி ஒருவர் விமானத்தின் கழிப்பறையைப் பயன்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், கழிப்பறையின் கதவும் உட்புற இடவசதியும் குறுகலாக இருப்பதால் அவரால் எளிதாக உள்ளே செல்ல முடியவில்லை.

இதனால் அவர் தலையைக் குனிந்தும், உடலைப் பக்கவாட்டில் வளைத்தும் மிகவும் சிரமப்பட்டு உள்ளே நுழைய முயற்சிக்கிறார். இந்தக் காட்சியைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் சிரிப்பதுடன், பயணியின் சிரமமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவைப் பயணியின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

விமானங்களில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், அதிக உயரம் கொண்டவர்களுக்கு இருக்கைகள் மற்றும் கழிப்பறைகளில் இடவசதி சவாலாக இருப்பதை இந்த வீடியோ மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.