ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதி விபத்து... அலறி கூச்சலிட்ட பயணிகள்!
Aug 24, 2026, 17:30 IST
டெல்லியில் இருந்து 164 பயணிகளுடன் பாட்னா நோக்கிச் சென்ற ஏர் இந்தியாவின் 'AI 1741' விமானம், பாட்னா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாகப் பறவை ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. எனினும், விமானி திறம்படச் செயல்பட்டு விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கியதால், அதிலிருந்த 164 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் ஓடுபாதையில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டனர். எனினும், விமான நிலைய செயல்பாடுகள் அனைத்தும் எந்தவிதப் பாதிப்புமின்றி வழக்கம்போல் இயங்கின. இந்தத் துணிச்சலான செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதற்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
