இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித் நியமனம்!

 
இந்திய விமானப் படை தளபதி ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித்

இந்திய விமானப் படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீக்சித் அவர்களை நியமித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போதைய விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங் வரும் அக்டோபர் 31-ம் தேதியுடன் பணிநிறைவு பெறுகிறார். அதனைத் தொடர்ந்து, விமானப் படையின் 29-வது புதிய தளபதியாக அசுதோஷ் தீக்சித் அக்டோபர் 31-ம் தேதி பிற்பகல் பொறுப்பேற்க உள்ளார். இவர் தற்போது இந்திய விமானப் படையின் துணைத் தளபதியாகப் பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கார்கில் போர் மற்றும் 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட முக்கியமான ராணுவ நடவடிக்கைகளில் அசுதோஷ் தீக்சித் மிக முக்கியப் பங்காற்றியுள்ள அனுபவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.