அயோத்தி ராமர் கோயில் முதல் CEO வாக ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்!
Sep 3, 2026, 06:40 IST
அயோத்தியில் உள்ள 'ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை'யின் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ராமர் கோயில் கட்டுமானத்திற்காகப் பெறப்பட்ட நன்கொடைகள் திருடப்பட்டது தொடர்பான சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து, அறக்கட்டளை தனது நிதிசார் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய நியமனத்தை மேற்கொண்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜிதேந்திர மிஸ்ரா, இந்திய விமானப்படையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீண்ட மற்றும் சிறப்பான அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
