துபாயில் ‘ஏர் டாக்ஸி’ நிலையம் திறப்பு - 45 நிமிடப் பயணம் இனி 10 நிமிஷம் தான்.. பட்டத்து இளவரசர் ஆய்வு!

 
air taxi air taxi

 


போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே பிரம்மாண்டமான ‘ஏர் டாக்ஸி’ நிலையத்தை துபாய் அரசு இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மிக அருகில், சுமார் 3,100 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த நான்கு அடுக்கு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. செங்குத்தாகத் தரையிறங்கும் மற்றும் புறப்படும் வசதி கொண்ட இந்த நிலையத்தில், மின்சாரத்தில் இயங்கும் ஏர் டாக்ஸிகளுக்கான விரைவு சார்ஜிங் மையங்கள் உள்ளன.

air taxi

குளிரூட்டப்பட்ட பயணியர் ஓய்வறை, இரண்டு அடுக்கு கார் பார்க்கிங் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் நேர சேமிப்புதான்.துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாம் ஜூமேரா வரையிலான 36 கிலோமீட்டர் தூரத்தைச் சாலை வழியாகக் கடக்கச் சாதாரணமாக 45 நிமிடங்கள் ஆகும். ஆனால், இந்த ஏர் டாக்ஸி மூலம் வெறும் 10 நிமிடங்களில் அந்த இலக்கைச் சென்றடைய முடியும்.

air taxi

இந்த ஏர் டாக்ஸி சேவையை மக்கள் தங்கள் மொபைல் செயலி மூலமே முன்பதிவு செய்து கொள்ளலாம். முதற்கட்டமாக விமான நிலையங்கள், முக்கிய ஹோட்டல்கள் மற்றும் வணிக மையங்களை இணைக்கும் வகையில் இந்தச் சேவைகள் இயக்கப்பட உள்ளன.துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தும் இந்த நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வணிக ரீதியிலான இந்தச் சேவை 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.