ஓடுபாதையில் நேருக்கு நேர் உரசிய விமானங்கள்.. இறக்கை உடைந்ததால் அதிர்ச்சி!

 
விமானம் விபத்து

கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் டாக்ஸியில் சென்று கொண்டிருந்த IndiGo Airbus A320neo விமானம் (VT-ISS) நிறுத்தப்பட்டிருந்த AI Express B737 விமானத்தின் மீது (VT-TGG) மோதியது. ஆய்வு மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக விமானம் வாயிலுக்குத் திரும்பியது.

இதனால் கொல்கத்தா மற்றும் தர்பங்கா இடையே இண்டிகோ விமானம் 6E 6152 தாமதமானது. நெறிமுறையின்படி, விமானம் ஆய்வு மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக விரிகுடாவிற்கு திரும்பியது.

கொல்கத்தா விமான நிலைய ஓடுபாதையில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதுவது போல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் புறப்படத் திட்டமிடப்பட்டது, அதே நேரத்தில் தர்பங்காவிலிருந்து இண்டிகோ விமானம் வந்தது. ஓடுபாதையில் இருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தின் மீது இண்டிகோ விமானம் மோதுவது போல் வந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விமானியின் சாதுர்யத்தால் இண்டிகோ-ஏர் இந்தியா விமானம் மோதுவது தவிர்க்கப்பட்டு இறக்கைகள் மட்டும் சிறிதளவு சேதமடைந்தது. விமானியின் துணிச்சலால் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த 4 குழந்தைகள் உட்பட 300 பேர் உயிர் தப்பினர். 2 விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது குறித்து விரிவான விசாரணை நடத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web