இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 100 புதிய விமான நிலையங்கள்!
இந்தியாவில் அடுத்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசின் வட்டார இணைப்புத் திட்டத்தின் (UDAN) கீழ் நூறு புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராமோகன் நாயுடு அறிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், முப்பதாயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
STORY | 100 new airports to be built in India over next 10 years: Aviation Minister Naidu
— Press Trust of India (@PTI_News) September 2, 2026
India will build 100 new airports in the next 10 years under the Centre's regional connectivity scheme UDAN with an outlay of Rs 30,000 crore, Civil Aviation Minister K Rammohan Naidu has… pic.twitter.com/iu2WpGQ7lO
நாட்டில் விமானப் போக்குவரத்துத் துறை மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாக உள்ளதாகவும், சிறிய நகரங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளிலும் விமான நிலையங்களை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் விமான நிலையங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பொதுமக்களின் பயணம் மேலும் எளிமையாக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த புதிய விமான நிலையங்களின் கட்டமைப்புப் பணிகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய இந்தப் புதிய போக்குவரத்து இணைப்புகள் நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
