சென்னையின் 2 வது விமான நிலையம்... செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி இடங்கள் தேர்வு!
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காகச் செய்யூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய இரண்டு இடங்கள் அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு இடங்களிலும் முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளக் கோரி இந்திய விமான நிலைய ஆணையத்திற்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இடங்களில் செய்யூர் தளம் புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய புதிய விமான நிலையத் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் எதிர்காலத்தில் போக்குவரத்து வசதிகள் மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு இடங்கள் குறித்த சாத்தியக்கூறு ஆய்வுகள் நிறைவடைந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
