தெலுங்கில் பிசியாகும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !

தமிழ் சினிமாவில் தனக்கென தனிமுத்திரை பதித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 'அட்டகத்தி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து, 'காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை' படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார். அதன்படி, ஐஸ்வர்யா ராஜேஷ், வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்த சங்கராந்திக்கு வஸ்துன்னம் படம் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வந்து ரூ. 200 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் வெற்றி பட நடிகையாக ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனால், புதிய தெலுங்கு படங்களில் அவரை நடிக்க வைக்க தெலுங்கு பட இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!