விவாகரத்து வழக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் ஆஜர்... !

 
ஐஸ்வர்யா

 நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா. இவருடைய கணவர் நடிகர் தனுஷ். இருவருக்கும் 2004ம் ஆண்டு  இருவீட்டார் சம்மதத்துடன்  திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள். இருவரும்  கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக  தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.  தனுஷ்-ஐஸ்வர்யா இடையேயான பிரச்சினையை தீர்க்க உறவினர்களும், நண்பர்களும் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.  

தனுஷ் ஐஸ்வர்யா

இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்த  நிலையில்   பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதில், 2004ல்  நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்' என கூறியிருந்தனர்.  இந்த மனுவை விசாரித்த குடும்பநல நீதிமன்றம்  தனுஷ்-ஐஸ்வர்யாவை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. நீதிபதி சுபாதேவி முன்னிலையில் நவம்பர் 2ம் தேதி  விசாரணைக்கு வந்த போது  நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் நேரில்  ஆஜராகவில்லை.

ஐஸ்வர்யா ரஜினி

இதைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையை இன்று நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதன்படி  விவகாரத்து வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜரானார். அப்போது தனுஷ் வந்துகொண்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரிவித்த நிலையில் விசாரணையை 12 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web