மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜீத்... ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐரோப்பாவில் தற்போது நடைபெற்று வரும் மிட்சலின் லீ மேன்ஸ் கோப்பைக்கான கார் பந்தயப் போட்டியில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித்குமாரின் கார், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்த போதிலும், நடிகர் அஜித் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.
கார் பந்தயங்களில் அஜிதுக்கு விபத்துகளைச் சந்திப்பது இது முதல் முறையல்ல; இதற்கு முன்பும் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் அவர் இது போன்ற விபத்துகளை எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, கார்களில் அதிக ஈடுபாடு கொண்ட அஜித், தனது பெயரில் சொந்தமாக ரேஸிங் அணி ஒன்றை உருவாக்கி சர்வதேசத் தொடர்களில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார்.
மேலும், அவரது சர்வதேச கார் ரேஸ் பயணம் மற்றும் அவர் எதிர்கொண்ட சவால்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள 'கிளாடியேட்டர்ஸ்' என்ற ஒரு மணி நேர ஆவணத் திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இதனிடையே, 'குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘டேர்டெவில்’ படத்திலும் அஜித் நடிக்க உள்ளார்.
