’தல’ அஜீத் கார் ரேசிங் டீம்... அசத்தல் வீடியோ!
தமிழ் திரையுலகில் ‘தல’ நடிகராக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜீத்குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அஜீத் திரைப்படங்களை தாண்டி வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, பைக் ரைடிங் ஆர்வலர்களுக்கு வணிக நோக்கில் ரைடிங் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
Ajith sir car revealed for 24HSeries.
— Ajith (@ajithFC) November 27, 2024
| #AK #Ajith #Ajithkumar | #VidaaMuyarchi | #GoodBadUgly | #AjithKumarRacing | #24HSeries | pic.twitter.com/82xyeqJSkU
இதுதவிர அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக 'அஜித் குமார் ரேசிங்'-ஐ துவங்கினார். அந்த வகையில், துபாய் ஆட்டோடிரோம் பந்தய களத்தில் நடிகர் அஜித் குமார் போர்ஷே ஜிடி 3 கப் காரை டெஸ்டிங் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
மேலும், ரேசிங் பயிற்சி வீடியோவை அஜித் குமாரின் மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தனது ரேசிங் பந்தய அணியின் காரை நடிகர் அஜித்குமார் அறிமுகப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த காரில் அஜித்குமார் ரேசிங் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை லோகோவும் அந்த காரில் பதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!