‘கில்லி’ பேனரைக் கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியீடு!
என்னை மன்னிச்சுடுங்க... ஒரு ஆர்வத்துல கிழிச்சுட்டேன்... என்று ‘கில்லி’ பட பேனரைக் கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.முன்னதாக ‘கில்லி’ படம் ரீ-ரிலீஸில் வசூலை வாரிக் குவித்து வரும் நிலையில், நேற்று அஜித் பிறந்தநாளையொட்டி, அஜித் நடித்த ‘தீனா’, ‘பில்லா’ ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
The guy who tore #Ghilli banner in kasi today has apologised 👍🏻
— Sankalp Ayan™ (@iBeingSankalp) May 1, 2024
Game over !! pic.twitter.com/JuBbmjQndm
இந்நிலையில், அஜித் பிறந்தநாளையொட்டி, ரீ-ரிலீஸ் கொண்ட்டாங்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் நடைப்பெற்றது. சென்னை ரோகிணி திரையரங்கிற்குள் அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து பரபரப்பு கிளப்பினர். சென்னை காசி தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த விஜயின் ‘கில்லி’ பட பேனரை படம் பார்க்க வந்த அஜித் ரசிகர் ஒருவர் மேலே ஏறி கிழித்தார். அஜித் ரசிகரின் செயல் இணையத்தில் கடும் கண்டனங்களைக் குவித்து அதிருப்தியை கிளப்பியது.

இந்நிலையில், பேனரைக் கிழித்த அஜித் ரசிகர்கள், மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “காலைல 11 மணிக்கு காசி தியேட்டரில் ‘தீனா’ படம் பார்க்கலாம் என்று வந்தேன். அங்கு ‘கில்லி’ பேனர் இருந்தது. பசங்களோடு சேர்ந்து சந்தோஷமாக கொண்டாடலாம் என்று ஒரு ஆர்வத்தில் கையில் இருந்த வண்டியின் சாவியை வைத்து கிழித்து விட்டேன். அண்ணன் விஜய் ரசிகர்களிடமும் தமிழக வெற்றிக் கழகம் நண்பர்களிடமும் தலைவணங்கி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
