புது லுக்கில் அஜித்... லீக்கானது 'குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு வீடியோ!
புது லுக்கில் செம ஸ்மார்ட்டாகவும், ஸ்டைலிஷாகவும் இருக்கிறார் நடிகர் அஜித். தற்போது ஸ்பெயினில் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், குடும்பத்தினருடன் சென்றிருக்கிறார் நடிகர் அஜித். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் அஜித்தின் புது லுக்கும், படப்பிடிப்பின் வீடியோ காட்சிகளும் லீக்கானது படக்குழுவினரை அப்செட்டாக்கி இருக்கிறது.
Real Don is Back ✅
— Arthur Morgan (@itssElonmusk) October 7, 2024
Marana mass look 💥🔥🔥
#GoodBadUgly going to be Fireeee 🤯#AK#GoodBadUgly pic.twitter.com/fqXUWVyWVQ
'விடாமுயற்சி’ படத்திற்கு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயினில் நடந்து வருகிறது. அங்கு அஜித் தனது குடும்பத்துடன் சென்றிருக்கிறார். குறிப்பாக, படப்பிடிப்பு இடைவேளையின்போது தனது மனைவி ஷாலினியுடன் அஜித் ஸ்பெயின் வீதிகளில் நடந்து வரும் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகியது.
இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் கசிந்துள்ளது. படத்தில் அஜித்தின் தோற்றமும் படத்தில் இருந்து சில காட்சிகளும் வைரலாகியுள்ளது. இதனால், படக்குழுவினர் மொத்தமாக அப்செட்டில் உள்ளனர். ’அஜித் போன்ற ஒரு நடிகர் நமக்கு கிடைத்திருக்கிறார்.

இது போன்று காட்சிகள் கசிந்தால் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இல்லாமல் போய்விடும். இனிமேல், இதுபோன்று நடக்கக்கூடாது’ என படக்குழுவினரை ஆதிக் ரவிச்சந்திரன் எச்சரித்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் பாதுகாப்பையும் பலப்படுத்தியிருக்கிறார்.
