'மங்காத்தா - 2' படத்தில் நடிக்க அஜித்குமார் திட்டம்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

 
மங்காத்தா  அஜித்குமார் அஜித் வெங்கட்பிரபு

நடிகர் அஜித்குமாரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமான 'மங்காத்தா' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதற்கான வாய்ப்புகள் மீண்டும் பிரகாசமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மங்காத்தா

ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'AK - 64' படத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 'AK - 64' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மங்காத்தா - 2' திரைப்படத்தில் அஜித் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மங்காத்தா

இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் முடிவடைந்து, 2027 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருப்பதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2011-ல் வெளியான 'மங்காத்தா' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் அஜித்தின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.