வாழ்த்துக்கள் ”தல”... ’ குட் பேட் அக்லி’ படப்பிடிப்புக்கு பிறகு பார்சிலோனா ரேஸ்!
நடிகர் அஜித் குமார் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது இப்போதே பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த திரைப்படத்தில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்து வருகிறார்.
Official statement Announced by Team @VenusMotoTours on Instagram✌️✨
— AJITH KUMAR♥️ (@ARUNTHALA007) November 23, 2024
The #GoodBadUgly schedule wraps up on November 24th, and Thala #Ajithkumar Sir is heading back to the racetrack in Barcelona! 🏁🔥#VidaaMuyarchi #AK pic.twitter.com/w6yLa80YO6
தற்போது, அஜித்துடன் அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உட்பட பல முண்ணனி நட்சத்திரங்கள் படப்பிடிப்பில் இணைந்துள்ளனர்.
குட் பேட் அக்லி படத்தை பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு பிறகு ரேஸிங்கில் பங்கேற்கவிருக்கிறார்.
இந்நிலையில் வீனஸ் மோட்டர்ஸ் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் “ பல்கேரியாவில் நடைபெற்றுவரும் குட் பேட் அக்லியின் படப்பிடிப்பு நவ.24இல் முடிவடையவிருக்கிறது. இதனையடுத்து அஜித்குமார் பார்சிலோனா வரவிருக்கிறார். நவம்பர் 27முதல் அணியுடன் சேர்ந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபடுகிறார். பயிற்சிக்கான புகைப்படங்கள், வீடியோக்களுக்கு காத்திருங்கள்.அவருக்கும் அணியினருக்கும் வாழ்த்து தெரிவிக்க எங்களுடன் இணைந்திடுங்கள். சிறப்பான ரேஸிங் சீசனுக்காக வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!