அஜித் ரேஸில் விஜய்... திரிஷாவும் ஆஜர்! 🔥வைரல் வீடியோ!

 
த்ரிஷா

 

லண்டனில் நடைபெற்ற Michelin Le Mans Cup கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற நிலையில், அவருக்கு ஆதரவாக தமிழக முதல்வரும் நடிகருமான விஜய் சில்வர்ஸ்டோன் சென்றார்.பந்தயம் தொடங்குவதற்கு முன்பு அஜித்தை சந்தித்த விஜய், அவரை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பந்தயத்தை தொடங்கி வைக்கும் வகையில் விஜய் பச்சைக் கொடியசைத்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அஜித் Ajith RedAnt by Virage அணிக்காக LMP3 Pro-Am பிரிவில் போட்டியிட்டார். இந்தப் போட்டியில் அவரது அணி ஒட்டுமொத்தமாக 38-வது இடத்தைப் பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில், நடிகை திரிஷாவும் சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் காணப்பட்டார்.

அஜித் கார் பந்தயத்தை முதல்வர் விஜய்யுடன் நேரில் கண்டு ரசித்த த்ரிஷா! | Trisha watched Ajith's car race in person alongside Chief Minister Vijay!

விஜய், அஜித், திரிஷா ஆகியோர் ஒரே நிகழ்வில் இடம்பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்வு கூடுதல் கவனம் பெற்றுள்ளது.மேலும், லண்டனில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன