‘வெள்ளை நிற கோட், சூட்டில் வந்து முதல் ஆளாக வாக்களித்தார் அஜித்!

 
அஜித் அஜித்

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் குமார் மின்னல் வேகத்தில் வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிச் சென்றுள்ளார். வழக்கம்போல எவ்வித பந்தாவும் இன்றி, வெள்ளை நிற கோட் அணிந்து சிம்பிளாக வந்த அஜித்தைக் கண்டு அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உற்சாகமடைந்தனர்.

அஜித்

வாக்குப்பதிவு தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பே மையத்திற்கு வந்த அஜித், அங்கு வரிசை தொடங்குவதற்கு முன்பே தயாராக இருந்தார். சரியாக 7 மணி அளவில் இயந்திரம் தயாரானதும், முதல் ஆளாகத் தனது வாக்கினைப் பதிவு செய்தார். பின்னர், தனது விரலில் இடப்பட்ட மையைத் தூக்கிக் காட்டிப் புன்னகைத்த அவர், அங்கிருந்தவர்களிடம் சிறு உரையாடலுக்குப் பின் உடனடியாகத் தனது காரில் புறப்பட்டுச் சென்றார்.

அஜித்

கடந்த சில தேர்தல்களாகவே காலை 7 மணிக்கு முன்பே ஆஜராகி விடுவதை அஜித் வழக்கமாகக் கொண்டுள்ளார். இன்றும் அதே பாணியில் அதிகாலையிலேயே தனது கடமையை முடித்து, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார். அஜித்தின் வருகையை அறிந்த ரசிகர்கள் அங்கு திரண்டாலும், அவர் விரைவாகச் செயல்பட்டதால் நெரிசல் இன்றி அவர் அங்கிருந்து கிளம்ப முடிந்தது.