அஜித்தின் கிரீடம், பில்லா -2 படத் தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ் காலமானார் - திரையுலகினர் அதிர்ச்சி!
Oct 7, 2026, 07:33 IST
தென்னிந்தியத் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல வெற்றிப் படங்களை வழங்கிய முன்னணி தயாரிப்பாளர் ஜார்ஜ் பயஸ் தாராய் (63) உடல்நலக் குறைவால் காலமானார்.
ஜார்ஜ் பயஸ் தாராய், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் இணை தயாரிப்பாளராகவும், நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தயாரிப்பில் வெளியான 'கிரீடம்', 'பில்லா 2', 'பாபநாசம்' போன்ற படங்கள் மிகவும் பிரபலமானவை. இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜார்ஜ் பயஸ், சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று காலமானார்.
அவரது உடல் நாளை அக்டோபர் 8ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
