அஜித்தின் 'டேர் டெவில்' ரிலீஸுக்கு முன்பே ரூ.185 கோடி வரை ப்ரீ-பிசினஸ் சாதனை!

 
அஜித் டேர் டெவில்

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகவுள்ள 'டேர் டெவில்' திரைப்படத்தின் திரையரங்க மற்றும் வெளியீட்டு உரிமைகளின் மதிப்பு ரூ.175 கோடி முதல் ரூ.185 கோடி வரை இருக்கும் என சினிமா வட்டாரங்கள் கணித்துள்ளன.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 64-வது திரைப்படத்திற்கு 'டேர் டெவில்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தைச் ஷாலினி அஜித்குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது.

அஜித் டேர் டெவில்

'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் வணிக வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்திற்கான சந்தை எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தனது உண்மையான வர்த்தகத் திறனை நிரூபிக்கும் வகையில் அஜித் இதில் கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு திரையரங்க உரிமை: ரூ. 60 கோடி, டிஜிட்டல் உரிமை: ரூ. 40 கோடி, செயற்கைக்கோள் உரிமை: ரூ. 30 கோடி என வியாபாரம் களைக்கட்ட துவங்கியிருக்கிறது.