அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்' ட்ரெய்லர் வெளியானது - திரையரங்குகளில் குவிந்த பிரபலங்கள், ரசிகர்கள்!
Sep 6, 2026, 18:49 IST
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள நடிகர் அஜித்குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' ஆவணப்படத்தின் சிறப்பு ட்ரெய்லர் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திரையிடல் நிகழ்வில் இயக்குநர்கள் ஏ.எல். விஜய், ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் சிறுத்தை சிவா ஆகியோர் நேரில் கலந்து கொண்டு ரசிகர்களுடன் இணைந்து உற்சாகமாக ட்ரெய்லரைக் கண்டு ரசித்தனர். ரசிகர்கள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து இந்தச் சிறப்பு ட்ரெய்லரைத் திரையரங்குகளில் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

நடிகர் அஜித்குமார் குறித்த இந்த ஆவணப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
