உஷார்... SBI பேங்க் லாக்கரில் வைத்த 11 சவரன் நகைகள் மாயம்... கதறும் இளம்பெண்!

 
லாக்கர்

வேலியே பயிரை மேய்வது என கேள்விப்பட்டிருப்பீர்கள்... அப்படியான கதை திருச்சியில் அரங்கேறி இருக்கிறது. வீட்டில் சில்லறைகளாக சிறுவாடை என சேர்த்து வைக்கிற பழக்கம் அந்த காலத்தில் இருந்தே பெண்களுக்கு உண்டு. கணவனுக்கோ, மகனுக்கோ தெரியாமல் தனக்கு வருகிற பணத்தை, தன்னுடைய அடிப்படை செலவுகளைப் புறக்கணித்து, எதிர்கால வாழ்வுக்காக சேர்த்து வைத்து, அவசர காலங்களில் செலவுகளுக்கு கொடுத்து குடும்பத்தை நிமிர்த்துவதில் பெண்கள் எப்போதுமே சிறந்தவர்கள்.  அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டியைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தன்னுடைய எஸ்பிஐ வங்கி கிளையில், லாக்கரில் வைத்திருந்த 11 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது குறித்து அதிர்ந்திருக்கிறார்.

பெங்களூரில் வசித்து வரும் கலைச்செல்வி, ஜனவரி மாதம் சொந்த ஊரான திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் தன்னுடைய லாக்கரில் 11 சவரன் நகைகளை பாதுகாப்பாக வைத்து  விட்டு பெங்களூருக்கு சென்றுள்ளார். நகைகளை தான் லாக்கரில் வைத்ததை சமயோசிதமாக வீடியோவாகவும் பதிவு செய்து விட்டு சென்றுள்ளார். 

திருட்டு நகைகள் கொள்ளை

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி, வங்கியில் இருந்து கலைசெல்விக்கு தொலைப்பேசி அழைத்து வந்துள்ளது. அவசரமாக வங்கி கிளைக்கு வருமாறு வங்கி அதிகாரிகள் கலைச்செல்வியை அழைத்துள்ளனர் காரணம் குறித்து கேட்ட போது வங்கி லாக்கர் தவறுதலாக மாறியுள்ளது என சமாளித்துள்ளனர்.

நேரில் வங்கிக்கு சென்று பார்த்த கலைச்செல்விக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனக்கு கொடுத்த லாக்கர் 87 வயதுடைய வேறொருவரின் லாக்கர் என்றும், தவறுதலாக அவருடைய லாக்கர் ஸ்பேர் கீயை கலைச்செல்வியிடம் கொடுத்து விட்டதாகவும் அதிகாரிகள் சமாளித்துள்ளனர். உடனடியாக வங்கி லாக்கரைத் திறந்துப்  பார்த்த கலைச்செல்விக்கு மேலும் அதிர்ச்சியாக, லாக்கரில் தான் வைத்த 11 சவரன் நகை பையை காணவில்லை.   

இன்று (ஏப்ரல் 30) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 160 ரூபாய் குறைந்தது!.

தன்னிடம் கொடுத்த லாக்கர் சாவியை இன்னொருவரிடம் எப்படி கொடுப்பீர்கள் என கலைச்செல்வி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார்.  ஆனால், இதுநாள் வரை கலைசெல்வியின் நகைகளுக்கான பதில் கிடைக்கவில்லை. நகைகளைத் திருடியது யார் என்று தெரியாமல், வங்கி அதிகாரிகள் தான் இந்த மோசடிக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு காத்திருக்கிறார் கலைச்செல்வி.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web