உஷார்... தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 15,933 ஆக உயர்வு; 9 பேர் பலி.. பாதுகாப்பா இருப்பது எப்படி? இதையெல்லாம் நோட் பண்ணுங்க!

 
உஷார்!! இந்த 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு !!

தமிழகத்தில் நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் இதுவரை தமிழகத்தில் மொத்தம் 15,933 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் டெங்கு

சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு மற்றும் பருவகாலத் தொற்றுகளின் தாக்கம் சற்று அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்க ஏதுவாக, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பிரத்யேக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

டெங்கு

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தவும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். பொது சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணிகளும் தேவையற்ற இடங்களில் தேங்கும் நீரை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.