பெற்றோர்களே உஷார்... சூடான சாதம் வடித்த நீரில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு!

 
குழந்தை

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள குன்னாரம்பட்டியைச் சேர்ந்தவர் கேப்டன் பிரபாகரன். இவரது மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மாட்டுப்பொங்கல் தினத்தன்று, அன்னக்கிளி  வீட்டில் சாதம் வடித்த நீரை அவர் வைத்திருந்தார். அப்போது, ​​அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரது மகன் நிவினேஷ் (வயது 3), தவறுதலாக சூடான வடிநீரில் விழுந்தார்.

இதையடுத்து சிறுவன் சூட்டில் வெந்த நிலையில் கருகி அலறினான். உடனடியாக சிறுவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நிவினேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதனால் சிறுவனின் பெற்றோர் கதறி அழுதனர். இந்நிலையில், சிறுவன் இறந்ததை குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!