உஷார்.. கொரோனாவை விட H5N1 வேகமாக பரவும்... விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

 
மாநகராட்சி தீவிரம்! சளி, காய்ச்சல் உடையவர்கள் வீடு, வீடாக கணக்கெடுப்பு!
உஷார்.. மக்களே... கொரோனாவை விட வேகமாக பரவும் தன்மைக் கொண்டது பறவைக் காய்ச்சல் நோய். ரொம்பவே ஜாக்கிரதையா இருங்க என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  2020 களில் பரவத்தொடங்கிய கொரோனா உலகம் முழுவதையும் வீட்டிற்குள் முடக்கியது. இதன் பிறகு தற்போது தான் பொருளாதார மந்தநிலையில் இருந்து படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது இந்நிலையில்  உலகம்  முழுவதும்  பறவைக் காய்ச்சல் H5N1 பரவ இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து  சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நோய் கொரோனா வைரஸை விட 100 மடங்கு ஆபத்தானது  இதில் இறப்பு விகிதம் மிகவும் அதிகம். இந்த வைரஸ் தீவிர நிலைகளை நெருங்கி வருவதாகவும், உலகளாவிய தொற்றுநோயை ஏற்படுத்தும் சாத்தியம் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

டெல்லியில் இதுவரை 7,128 பேருக்கு டெங்கு காய்ச்சல்!!.. 9 பேர் பலி!!..

இது குறித்து பிட்ஸ்பர்க்கில் உள்ள முன்னணி பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டாக்டர் சுரேஷ் குச்சிப்புடி, H5N1 காய்ச்சலுக்கு மனிதர்கள் உட்பட பாலூட்டிகளை பாதிக்கும் ஆற்றல் உள்ளது. இதன் காரணமாக, தொற்றுநோய் ஏற்படலாம். உலகம் முழுவதும்  பல நாடுகளில் H5N1 தொற்று வேகமாக பரவி வருவதாக கூறினார். இந்த வைரஸுக்கு எதிராக நாம் எச்சரிக்கையாகவும் தயாராகவும் இருக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

காய்ச்சல்
பறவைக் காய்ச்சல் குறித்து மற்றொரு நிபுணர், ஜான் ஃபுல்டன்  'H5N1 தொற்றுநோய் மிகவும் தீவிரமானது. இது COVID-19 தொற்றுநோயை விட மிகவும் ஆபத்தானது. ஃபுல்டன் ஒரு மருந்து நிறுவனத்தின் ஆலோசகர். இது கொரோனாவைக் காட்டிலும்  100 மடங்கு மோசமாக தெரிகிறது எனக் கூறியுள்ளார்.

பறவைக் காய்ச்சல் குறித்து உலக சுகாதார மையம் 2003 முதல் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100 பேரில் 52 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.  இறப்பு விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.  தற்போதைய கோவிட் இறப்பு விகிதம் 0.1 சதவீதம் தான். இதனால் கொரோனாவை காட்டிலும் ஆபத்தான வகையில் பரவத் தொடங்கியிருப்பது பெரும் கவலையை அளிக்கிறது எனக் கூறியுள்ளது.WHO தரவுகளின்படி அமெரிக்காவின் 6 மாநிலங்களில் அதன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பசுக்கள், பூனைகள் மற்றும் மனிதர்களும் இதில் அடக்கம் தான்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web