அலர்ட்.. இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

 

தெற்கு குஜராத் முதல் மத்திய கேரளா வரை நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாகத் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தற்போதைய அறிவிப்பின்படி, இன்று தமிழகத்தின் முக்கிய மலை மாவட்டங்களான நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மழை

மழை பெய்யும் சமயங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று பலமாக வீசக்கூடும் என்பதால், மலைப்பாதைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மழைப்பொழிவு விபரம்: கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகக் கனமழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் தென்காசி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய இதர மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை விடுமுறை

சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இருப்பினும், காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் பகல் நேரங்களில் உஷ்ணத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.

மலைப்பாங்கான பகுதிகளில் திடீர் நிலச்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் இருப்பதால், உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.