உஷார்... திருமலை அருகே மலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்... வனத்துறை எச்சரிக்கை!

திருப்பதி திருமலை அருகே மலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி, திருமலை அருகே சேஷாசலம் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைப்பாதை வழியாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு மலையேறி சென்று தரிசித்து வரும் நிலையில், மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை பதைபதைக்க வைத்துள்ளது.
திருமலை அருகே சிலோத்தோரணம் என்கிற மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் பாறைகள் 'தோரண வாயில்' போன்ற வடிவில் இயற்கையாகவே அமைந்துள்ளன. இந்நிலையில் மலைப்பாதையில் படியேறி செல்லும் பக்தர்கள் ஏராளமானவர்கள் சிலோத்தோரணம் மலைப்பாறையை அருகே சென்றுப் பார்ப்பார்கள்.
அப்படி பக்தர்கள் நேற்று முன்தினம் மதியம் சிலோத்தோரணம் மலையைப் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென இரு பாறைகளின் இடுக்குகளில் இருந்து ஒரு சிறுத்தை வந்து படுக்கும் காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து திருமலை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுத்தையை விரட்டியடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர். அப்போது வனத்துறை அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், “திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளன. இருப்பினும், கடந்த காலங்களில் சிலாத்தோரணம் மலைப்பகுதிக்கு சிறுத்தைகள் வந்துள்ளன.
தற்போது மீண்டும் சிறுத்தை வந்துள்ளது. எனவே திருமலைக்கு வரும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அலிபிரி நடைபாதையில் எந்த ஒரு பக்தரும் தனியாகச் செல்ல வேண்டாம், கும்பலாகச் செல்ல வேண்டும்” என எச்சரிக்கை விடுத்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!