உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
கன மழை

தமிழகத்தில் இன்று அடுத்த 3 மணிநேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர்  என 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

கடந்த ஜனவரி 15ம் தேதியுடன் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில், வடக்கு திசையில் இருந்து தெற்கு நோக்கி வீசிய குளிர் காற்றின் காரணமாக கடும் குளிரும், பனி மூட்டமும் நிலவி வருகிறது. அவ்வப்போது மோசமான பனி மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வரப்படுகின்றன.

இன்னும் கோடைக்காலம் முழுமையாக தொடங்கவில்லை என்றாலும், வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கு காற்றின் ஈரப்பதம் குறைந்ததே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மழை

அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web