உஷார்... சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்.. பத்திரமா இருங்க மக்களே!

 
பொதுமக்களே உஷார்...  இந்த மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட்... !

சென்னையில் நேற்று ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை கொட்டித்தீர்த்த நிலையில், இன்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ள சூழலில், இன்றும் தீவிர மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரெட்

திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்குக் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ரெட்

வானிலை ஆய்வு மையத்தின் வகைப்பாட்டின்படி, 24 மணி நேரத்தில் 20.44 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டும், 11.56 முதல் 20.44 செ.மீ. வரை மிக கனமழை பெய்யும் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், 6.45 முதல் 11.55 செ.மீ. வரை கனமழை பெய்யும் பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட்டும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.