உஷார்... கேரளாவில் மீண்டும் வேகமெடுக்கும் ஷிகெல்லா தொற்று... 23 பேருக்கு தீவிர சிகிச்சை... 3 பேர் பாதிப்பு!

 
ஷிகாலா தொற்று வைரஸ்

கேரள மாநிலத்தில் கோழிக்கோட்டைத் தொடர்ந்து மலப்புரம் மாவட்டத்திலும் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமரம்பலத்தில் உள்ள கடையில் சிற்றுண்டி சாப்பிட்ட நான்கு வயது சிறுமிக்கும், பாலுண்டா பகுதியில் உள்ள உணவகத்தில் மந்தி உணவு சாப்பிட்ட இருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஷிகெல்லா

இதற்கிடையே, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் 23 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே தெரியவரும். பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஷிகெல்லா தொற்று

ஏற்கெனவே கோழிக்கோடு மாவட்டம் மேப்பயில் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் மூவருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டது. பள்ளிக் கிணற்று நீர் மூலம் தொற்று பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அந்தப் பள்ளிக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.