உஷார்... ரயில்களில் இரவு நேரத்தில் 'மொபைல் சார்ஜிங்' கிடையாது.. முன்னேற்பாடு செய்துக்கோங்க!

 
ரயில் சார்ஜ் செல்போன்

'ரயில்களில் நள்ளிரவு நேரங்களில் செல்போன் சார்ஜிங் வசதி இருக்காது' என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பயணிகள் அதற்கேற்ப இரவு நேர பயணம் மேற்கொள்ளும் போது தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துக்கோங்க. 

ரயில்

இது குறித்து ரயில்வே வாரிய உத்தரவின்படி, ரயில்களில் தீ விபத்துகளை தடுக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேரங்களில் ரயில் பெட்டிகளில் செல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயின்ட்களுக்கு, மின் இணைப்பு ரத்து செய்யப்படுகிறது. இது கடந்த பல ஆண்டுகளாகவே நடைமுறையில் இருந்து வருகிறது. 

ஒரே சார்ஜர்

எனினும் சமீப காலமாக ரயில் பெட்டிகளில், 'சார்ஜிங் பாயின்ட்' வேலை செய்யவில்லை' என, பயணியர் சிலர் ரயில்வே உதவி எண்ணுக்கும், செயலிக்கும் புகார் தெரிவித்து வருகின்றனர். சிலர் சமூக வலைதளத்தில் புகாராக எழுதி வருகின்றனர்.

இனி ரயில்களில் இரவு நேர பயணம் மேற்கொள்ளும் போது தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துக்கோங்க.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web