திருமணத்துக்கு 2 கோழிகள் கேட்ட பெண்! வைரலான வீடியோவால் குவிந்த தங்க நகைகள், விலையுயர்ந்த பரிசுகள்!

 
நெகிழ்ச்சி

 

வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவைச் சேர்ந்த ஆதரவற்ற பெண் ஷஹ்ராசாதின் திருமணக் கதை சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, விருந்தினர்களுக்கு உணவு தயாரிக்க உதவுமாறு அண்டை வீட்டாரிடம் அவர் இரண்டு கோழிகளைக் கடனாகக் கேட்டுப் பெற்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

வைரலான காணொளி… குவிந்த உதவிகள்!

ஷஹ்ராசாதின் எளிமையான சூழ்நிலையை அறிந்த பலரும் அவருக்கு உதவ முன்வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது திருமணத்தில் கலந்துகொள்வதற்காக அல்ஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமண நிகழ்ச்சியில் அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் பலரும் பரிசுப் பொருட்களை வழங்கினர்.

தங்க நகைகள் வழங்கி மகிழ்வித்த மக்கள்!

ஷஹ்ராசாதின் பொருளாதார நிலையை அறிந்த மக்கள், அவரால் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்த பரிசுகளையும் தங்க ஆபரணங்களையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இரண்டு கோழிகளைக் கேட்ட சம்பவத்தில் தொடங்கிய இந்தக் கதை, பலரது மனதையும் தொட்டதுடன், சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் உதவ முடியும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.