சென்னையில் இன்று அகில இந்திய தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி தொடக்கம்: 10 அணிகள் பங்கேற்பு!
Oct 22, 2026, 10:09 IST
சென்னையில் 97-வது அகில இந்திய எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பைக்கான ஹாக்கி போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கி வரும் நவம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்திய ரயில்வே, இந்திய ராணுவம் உள்ளிட்ட முன்னணி அணிகளுடன் மலேசிய ஜூனியர் அணியும் இத்தொடரில் களமிறங்குகிறது. மொத்தம் 10 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்குச் சுழற்க்கோப்பையுடன் ரூ.7 லட்சம் பரிசுத் தொகையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
