பரபரப்பான சூழலில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர்! ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது!

 
பாராளுமன்றம்

நடப்பாண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் நாளை ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது  பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில்  எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்ப திட்டமிட்டு உள்ளன. இதனை எதிர்கொள்ள மத்திய அரசும் தயாராகி வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும் என   நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர்  பிரகலாத் ஜோஷி  தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம்  ஒத்திவைப்பு

 இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் அனைத்து கட்சிகளும் கூட்டத்தொடரில், ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மற்றும் பிற விசயங்களை மேற்கொள்ள வேண்டும் என  கேட்டு கொண்டார்.  இந்நிலையில்  நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடரை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு அமைச்சர்   ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று பிற்பகல்  அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.  2024ல்    நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உட்பட  தேசிய கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன.  

பாராளுமன்றம்

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டம்   ஜூலை  17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்ற நிலையில்  தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) சார்பில் 38 கட்சிகள் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நடத்தப்பட்டது.  பிரதமர் மோடி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில் நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் நாளை நடைபெற உள்ளது.  இதில், மணிப்பூர் வன்முறை விவகாரம் மற்றும் மத்திய அமைப்புகளை பிறருக்கு எதிராக பயன்படுத்துவது உட்பட  மற்ற விசயங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web