மாசம் ஒரு தடவ தான் சுத்தம் செய்வோம்... பலகாரக் கடை ஓனர் அதிர்ச்சி வாக்குமூலம்...!!

மாதத்திற்கு ஒரு முறை மட்டும் தான் கடையை சுத்தம் செய்வதாக மாதத்திற்கு ஒரு முறை மட்டும் தான் கடையை சுத்தம் செய்வதாக தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு தென்காசி மாவட்டம் மேலகரம் மற்றும் குத்துக்கல் வலசை பகுதிகளில் உள்ள தீபாவளி பலகாரங்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் தயார் செய்யப்படும் கூடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நாக சுப்பிரமணியன் சோதனை மேற்கொண்டார்.
சோதனையின் போது அதிகமாக செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட 31 கிலோ இனிப்பு பலகாரங்கள், 22 கிலோ தின்பண்டங்கள், 40 லிட்டர் மீண்டும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், ஒன்றரை லிட்டர் காலாவதியான குளிர்பானங்கள், 7 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மேலும் எரிப்பதற்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ முந்திரி தோடுகள் அப்பகுதிகளில் உள்ள கடைகளிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சில கடைகளில் மாதத்திற்கு ஒரு முறை மட்டும் தான் கடையை சுத்தம் செய்வதாக தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து தரமற்ற இனிப்பு மற்றும் தின்பண்டங்களை வைத்திருந்த 3 கடைகளுக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தீபாவளி பலகாரங்கள் தயார் செய்யும் கூடங்களில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பலகாரங்கள் தயார் செய்யும் முன் தாயார் செய்யும் இடங்களை சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தினார். பண்டிகை நாட்களில் இவ்வாறு அதிக அளவிலான தரமற்ற பலகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.