‘விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே’ - மே 18 தமிழின எழுச்சி நாளில் சீமான் உருக்கமான அறிக்கை!

 
மே 18 சீமான் மே 18 சீமான்

மே 18 தமிழ்ப்பேரின எழுச்சி நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமைத் தளையை உடைத்தெறிய அனைவரும் தயாராக வேண்டிய வரலாற்றுப் பெருந்தருணம் இது என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

சீமான்

மேலும் தமிழர்கள் அனைவரும் லட்சியவெறி கொண்ட வேங்கைகளாக எழுந்து, பேரெழுச்சியோடு நம் சொந்த இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களம் காண வேண்டும் என்றும் இந்த நன்னாளில் அதற்கான உறுதிமொழியை ஏற்குமாறும் தமிழர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நமது இலக்கு ஒன்றுதான், அது நம் தமிழினத்தின் விடுதலை மட்டுமே என்றும் சீமான் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

சீமான்

நாம் அனைவரும் ஒரே இனமாக ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே நமது உன்னத இலக்கை எளிதில் வெல்ல முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். விழுவதெல்லாம் அழுவதற்கல்ல, வீறுகொண்டு மீண்டெழுவதற்கே என்ற தாரக மந்திரத்துடன் தமிழர்கள் முன்னேற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சீமானின் இந்த நெகிழ்ச்சியான அறிக்கை தற்பொழுது இணையதளப் பக்கங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.