சம்பாதிச்ச பணமெல்லாம் போச்சு... ‘மைனா’ நந்தினியின் பரிதாப நிலை!

 
‘மைனா’ நந்தினி


இத்தனைக் வருஷங்களாக கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணமெல்லாம் போச்சு என்று பரிதாபமாக மைனா நந்தினி புலம்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், கவலைப்படாதீங்க... உங்க திறமைக்கு நீங்க மீண்டும் பழைய படி வந்துடுவீங்க என்று ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமான நந்தினி, அதன் பின்னர் அந்த கதாபாத்திரத்தின் பெயரிலேயே மைனா நந்தினி என்று அழைக்கப்பட்டு வந்தார்.  அதன் பின்னர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை என்று தொடர்ந்து படங்களிலும் நடித்து வந்தவர் தன்னுடைய பிரபலத்தைப் பயன்படுத்தி பிக்பாஸ் 6வது சீசனிலும் கலந்து கொண்டார்.

‘மைனா’ நந்தினி

அதன் பின்னர் சீரியலுக்கு முழுக்குப் போட்டு விட்டு தனியே மைனா விங்ஸ் என்ற பெயரில் யூ-ட்யூப் சேனலைத் துவங்கினார். இந்த சேனல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று 16 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் குவிந்தனர். அதன் பின்னர் லவ் ஆக்‌ஷன் டிராமா என்று புதிதாய் இன்னொரு யூ - ட்யூப் சேனலைத் தொடங்கி அதில் குறும்படங்களை வெளியிட்டு வந்தார். புள்ளத்தாச்சி என்ற பெயரில் வெப் தொடரில் நடித்து தனது யூ-ட்யூபில் வெளியிட்டு வந்த நிலையில், அந்த வெப் தொடரை பாதியில் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார். 

‘மைனா’ நந்தினி

இந்த வெப் தொடருக்காக இலங்கை சென்று படப்பிடிப்பு நடத்திவிட்டு திரும்பி வருகையில், படப்பிடிப்பின் மொத்தமும் இருந்த ஹார்டு டிஸ்க் தவறுதலாக கீழே விழுந்து வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 

இதன் தங்களது மொத்த உழைப்பும், பணம் வீணாகி விட்டதாக மைனா நந்தினியும், அவரது கணவரும் தெரிவித்துள்ளனர். இதற்கு தான் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!