அத்தனையும் சத்துக்கள்... இந்த ஒரு கிழங்கை மிஸ் பண்ணாதீங்க... எத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வு தெரியுமா?!

 
சர்க்கரைவள்ளி கிழங்கு

அனைவராலும் விரும்பிச் சாப்பிடப்படும் கிழங்கு வகைகளில் ஒன்றான சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சுவைமிக்கதாக இருப்பதுடன் பல்வேறு மருத்துவக் நன்மைகளையும் தன்னுள் கொண்டுள்ளது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு செரிமான மண்டலத்தைச் சீராக வைத்திருக்கப் பெரிதும் உதவுகிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகளவில் வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானப் பாதையைச் சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிரந்தரத் தீர்வை அளிக்கிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கு

இந்த கிழங்கை நன்றாகக் கழுவித் தோலுடன் சேர்த்துச் சாப்பிடும் போது முழுமையான நார்ச்சத்து நமக்குக் கிடைக்கிறது. நாம் அன்றாடம் உண்ணும் சாதாரணக் காய்கறிகளை விடக் கிட்டத்தட்ட 3 மடங்கு கூடுதல் ஆரோக்கிய நன்மைகளை இது வழங்குகிறது. மலச்சிக்கலைத் தீர்ப்பது மட்டுமன்றி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு துணைபுரிகிறது.

உடலில் தங்கியுள்ள நச்சுகளை வெளியேற்றி, உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் தோலின் சுருக்கங்களைப் போக்கி, நீண்ட காலம் இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கச் செய்கின்றன. உடலில் கணையத்தின் செயல்பாட்டை ஊக்குவித்து, இன்சுலின் சுரப்பைச் சீராக்கும் ஆற்றல் சர்க்கரைவள்ளிக் கிழங்கிற்கு உண்டு.

சர்க்கரைவள்ளி கிழங்கு

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் அல்லது வாரத்தில் சில நாட்கள் இந்த கிழங்கை அவித்துச் சாப்பிட்டு வந்தான் நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற முடியும்.