வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்வதில் தாமதம்... ஆன்லைனில் விற்பனை... ?

 
வீட்டு வசதி வாரியம்

சென்னை எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு எதிரே எர்ணாவூர் பகுதியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. ரூ.1,168 கோடியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கும் வகையிலான 6,877 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு தற்போது பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.17 லட்சம் மதிப்புள்ள குடியிருப்புக்கு ஒன்றிய அரசு ரூ.1.5 லட்சம் மானியமாகவும் தமிழக அரசு ரூ.12 லட்சத்தையும் வழங்க மீதம் உள்ள ரூ.3.40 லட்சத்தை பயனாளிகள் ஏற்கவேண்டும். விதிமுறைகள் படி விண்ணப்பம் செய்து தேர்வு செய்த பின் பணம் செலுத்துபவர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்: திட்டங்கள், தகுதி மற்றும் எப்படி விண்ணப்பிப்பது

விண்ணப்பம் செய்த பலருக்கு விதிமுறைகளை காரணம் காட்டி வீடுகள் ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை சுமார் 150 பயனாளிகள் மட்டுமே குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றுள்ளனர் என்று தெரிகிறது. இதனிடையே தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பில், ஒதுக்கீடு செய்யப்படும் குடியுரிமை தனியார் ஒருவர் ஆன்லைன் தளத்தில் குடியிருப்புகள் ரூ.4.50 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் என்று விளம்பரம் படுத்தியுள்ளார். இதை பார்த்ததும் பயனாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tamil - வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.8,852 கோடி ஒதுக்கீடு.. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் ...

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு ஏழை, எளிய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். இதில் ஒதுக்கீடு பெற கடும் விதிமுறைகள் இருப்பதால் ஒதுக்கீட்டை பெற முடியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்ளனர் என்றும் கூறினர். நேரடியாக விண்ணப்பம் செய்யும் போது விண்ணப்பம் செய்ததற்கான அக்னாலேஜ்மென்ட் கொடுக்கப்படாததால் குடியிருப்பு ஒதுக்கீடு வருமா அல்லது வராதா என்ற நிலைமை உள்ளது என்றும் தெரிவித்தனர்.