உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எப்போதும் ஆதரவு... வடகொரியா அதிபர் கிம் ஜாங் உறுதி!
உக்ரைனுக்கு எதிரான போரில் எப்போதும் ரஷ்யாவுக்கு வடகொரியா தனது ஆதரவை அளிக்கும் என அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.
நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவை ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன. அவற்றின் உதவியால் உக்ரைன் இன்னும் போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.

அதேபோல் ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக உள்ளது. அதன்படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு வடகொரியா அனுப்பியது. இதற்கிடையே ரஷ்யாவுக்குள் நீண்ட தூர ஏவுகணையை தாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்யா தனது நாட்டின் அணு ஆயுத கொள்கையை மாற்றியது.
அதாவது தங்கள் மீது நீண்ட தூர ஏவுகணை தாக்குதல் நடத்தினாலே அணு ஆயுதத்தை பயன்படுத்தப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்தார். இதனால் மூன்றாவது உலகப்போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை மற்றும் பல நாடுகள் கவலை தெரிவித்தன. இந்நிலையில் ரஷ்ய ராணுவ மந்திரி ஆண்ட்ரே பெலோசோவ் தலைமையிலான குழுவினர் வடகொரியா சென்று அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசினர்.

அப்போது கிம் ஜாங் அன் கூறுகையில், `நேட்டோ கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி நடவடிக்கையே இந்த போர் ஆகும். எனவே உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷ்யாவுக்கு தனது ஆதரவை அளிக்கும்' என தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
